காமன்வெல்த்: இந்தியாவிற்கு வெண்கலம் பெற்றுக் கொடுத்தார் தீபக்

காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான பளுதூக்குதலில் இந்தியாவின் தீபக் வெண்கலம் வென்றார்.

காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான பளுதூக்குதலில் இந்தியாவின் தீபக் வெண்கலம் வென்றார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு நடக்கிறது. இதில், ஆண்கள் பளுதூக்குதலில் 69 கி.கி., எடைப்பிரிவில் போட்டி நடந்தது. இதன் 'ஸ்னாட்ச்' பிரிவு இரண்டாவது வாய்ப்பில் இந்திய வீரர் தீபக் 136 கிலோ எடை தூக்கினார். அடுத்து நடந்த 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் 2-வது வாய்ப்பில் அதிகபட்சம் 159 கி.கி., எடையை தூக்கினார். ஒட்டுமொத்தமாக 295 கி.கி., எடை தூக்கி, மூன்றாவது இடம் பெற வெண்கலப்பதக்கம் மட்டும் கிடைத்தது.

இப்பிரிவில், வேல்சின் கரேத், 299 கி.கி., எடை தூக்கி தங்கம் வென்றார். இலங்கையின் இண்டிகாவுக்கு (297 கி.கி.,), வெள்ளி கிடைத்தது. இதன்மூலம், இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

Newsletter