காமன்வெல்த் போட்டியில் 2-வது தங்கப் பதக்கத்தை வென்றது இந்தியா

காமன்வெல்த் போட்டியில் மகளிர் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் சஞ்சிதா பானு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், இந்தியா 2-வது தங்கத்தை வென்றது.

காமன்வெல்த் போட்டியில் மகளிர் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் சஞ்சிதா பானு தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், இந்தியா 2-வது தங்கத்தை வென்றது.

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், 71 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 பேர் களம் கண்டுள்ளனர். இந்த நிலையில், இன்று நடைபெற்ற மகளிருக்கான பளுதூக்குதல் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்சிதா பானு தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். காமென்வெல்த் போட்டியில் நேற்று, இந்தியாவுக்கு ஒரு தங்க பதக்கமும், ஒரு வெள்ளிப்பதக்கமும் கிடைத்தது. காமன்வெல்த் போட்டியில் இந்தியா தற்போது வரை 3 பதக்கங்களை வென்றுள்ளது.

இதன்மூலம், காமன்வெல்த் போட்டியில் இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி உள்பட 3 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Newsletter