இனி ஆஸி., அணிக்காக விளையாடப் போவதில்லை : வார்னர் கண்ணீர்மல்க பேட்டி

பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் தனது தவறுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்ட வார்னர், இனி ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் தனது தவறுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்ட வார்னர், இனி ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடப் போவதில்லை என தெரிவித்துள்ளார். 

கேப்டவுனில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டின் 3-வது நாளில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் பான்கிராப்ட் தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் நிற சொரசொரப்பு காகிதத்தால் பந்தை சேதப்படுத்த முயற்சித்ததும், இதற்கு ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் மூளையாக செயல்பட்டதும் அம்பலமானது. ஆஸ்திரேலிய வீரர்களின் மோசடி, உலக கிரிக்கெட் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட ஸ்டீவன் சுமித்தின் கேப்டன் பதவி பறிபோனது.

இது குறித்து விசாரணை நடத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட தலா ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் விளையாட தடையும் விதித்தது. அத்துடன் தடை காலம் முடிந்து மேலும் ஓராண்டுக்கு ஸ்டீவன் சுமித்தின் பெயர் கேப்டன் பதவிக்கு பரிசீலிக்கப்படாது என்றும் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. இந்த நிலையில் தனது தவறுக்காக மன்னப்பு கேட்டுள்ள வார்னர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதுடன் இனி ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட போவதில்லை என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கண்ணீர் மல்க பேட்டிளித்த டேவிட் வார்னர் துணை கேப்டனுக்குரிய அளவில் தவறுக்கு முழு பொறுப்பேற்று மிகவும் வருந்துகிறேன் என கூறினார். 

மேலும் அவர் கூறும் போது என் நாட்டிற்காக மீண்டும் விளையாடுவதற்கான ஒரு சலுகை எனக்கு ஒரு நாள் வழங்கப்படலாம் என்ற நம்பிக்கையின் ஒரு சிறிய வெளிச்சம் இருந்தது. ஆனால் மீண்டும் ஒருபோதும் நடக்கக்கூடாது என்ற நான் ராஜினாமா செய்திருக்கிறேன். வரவிருக்கும் வாரங்களிலும் மாதங்களிலும் நான் எப்படி நடப்பேன் என்று பார்ப்பேன். நான் ஒரு மனிதனைப்போல தான் இருக்கிறேன். நான் கடுமையான மாற்றங்களை செய்ய உதவும் ஆலோசனை மற்றும் நிபுணத்துவத்தை நாடுகிறேன். நாங்கள் எங்கள் நாட்டை தாழ்த்தி விட்டோம். நாங்கள் ஒரு மோசமான முடிவை எடுத்தோம். நான் அதில் கலந்து கொண்டேன், எனக் கூறினார்.

Newsletter