இறுதிகட்டத்தை எட்டியுள்ள மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள்

ஈஷாஅவுட்ரீச், சோழா குழுமம் சார்பில் நடத்தப்பட்டு வரும் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன

கோவை: ஈஷாஅவுட்ரீச், சோழா குழுமம் சார்பில் நடத்தப்பட்டு வரும் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. 



கோவை ஈஷா அவுட்ரீச், சோழா குழுமம் மற்றும் புதுப்பாளையம் இளைஞர்கள் சார்பில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி புதுப்பாளையத்தில் நடந்தது. இதில், சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து 30 அணிகள் பங்கேற்றன. நேற்று நடந்த முதல் காலிறுதிப்போட்டியில், சாடிவயல்அணி, மத்வராயபுரம் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாடிவயல் அணி 2-1 என்ற செட் கணக்கில் மத்வராயபுரம் அணியை வீழ்த்தியது.

மற்றொரு காலிறுதிப் போட்டியில் கரடிமடை அணி, புதுப்பாளையம் அணிகள் மோதின. துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கரடிமடைஅணி, 2-0 என்ற நேர்செட் கணக்கில் புதுப்பாளையம் அணியை வென்றது மூன்றாவது காலிறுதி போட்டியில் தேவராயபுரம் 'ஆ' அணி, தீனம் பாளையம்அணியையும், 4-வது காலிறுதிப் போட்டியில், தேவராயபுரம் 'அ' அணி வடிவேலம்பாளையம் அணியையும் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

Newsletter