காக்கிச்சட்டை அணிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன்

இந்திய மகளிர் கிரிக்கெட் டி20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பஞ்சாப் மாநில போலீசில் துணை கண்காணிப்பாளராக பணியில் இணைந்துள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் டி20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பஞ்சாப் மாநில போலீசில் துணை கண்காணிப்பாளராக பணியில் இணைந்துள்ளார். 

இந்திய மகளிர் கிரிக்கெட் டி20 அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் உள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த ஆண்டு உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதால், அம்மாநில காவல்துறையில் டி.எஸ்.பி பதவி அளிக்க தயாராக இருப்பதாக முதலமைச்சர் அம்ரீந்தர்சிங் அறிவித்திருந்தார்.

ரயில்வே துறையில் பணியாற்றி வந்த ஹர்மன்ப்ரீத் கவுர் பஞ்சாப் மாநில காவல்துறையில் இணைய முடிவெடுத்ததையடுத்து, தன்னை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். அவருக்கு முதலமைச்சர் அம்ரீந்தர்சிங் பரிந்துரையும் செய்திருந்தார். இந்நிலையில், முறைப்படி காவல்துறையில் கவுர்  இணைந்துள்ளார். அவருக்கு முதலமைச்சர் அம்ரீந்தர் மற்றும் மாநில டி.ஜி.பி சீருடையில் ஸ்டாரை அணிவித்தனர்.

Newsletter