பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் நியமனம்

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஐ.பி.எல்., போட்டியில் விளையாடிய அந்த அணி, ஆல் ரவுண்டா அக்ஷர் படேலை மட்டும் தக்க வைத்துக் கொண்டு, அனைத்து வீரர்களையும் விடுவித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் நடைபெற்ற ஏலத்தின் போது, புதிய வீரர்களை தேர்வு செய்யப்பட்டனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இதுவரை விளையாடிய அஸ்வின் இந்த வருடம் பஞ்சாப் அணிக்குத் தேர்வானார். அவரை ரூ. 7.60 கோடிக்கு அந்த அணி ஏலம் எடுத்தது. இந்நிலையில் அஸ்வினை கேப்டனாக நியமித்து பஞ்சாப் அணி ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

சமீபத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல, கொல்கத்தா அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த கம்பீர், அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட நிலையில், புதிய கேப்டனாக யாரை நியமிப்பது என அந்த அணியின் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. 

11-வது ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி, வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கவுள்ளது. ஆர்ப்பரிக்கும் ஆட்டங்கள், அதிரடியான திருப்பங்கள் என பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கும் இப்போட்டிகளுக்கு உலக அளவில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது.

Newsletter