ஆஷஷ் தொடரில் சூதாட்டம் நடக்கவில்லை : ஐ.சி.சி.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ஆஷஷ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியில் சூதாட்டம் எதுவும் நடக்கவில்லை என ஐ.சி.சி. அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ஆஷஷ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியில் சூதாட்டம் எதுவும் நடக்கவில்லை என ஐ.சி.சி. அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதிய ஆஷஷ் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தத் தொடரில் 3-வது டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடந்தது. இதில், ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் 3-வது டெஸ்ட் போட்டியில் ‘மேட்ச் பிக்சிங்’ என்ற சூதாட்டம் நடந்ததாகப் புகார்கள் எழுந்தது. இதையடுத்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) விசாரணை நடத்தியது. இதன் அறிக்கையை நேற்று வெளியிடப்பட்டது.

அதில், 3-வது டெஸ்ட் போட்டியில் சூதாட்டம் எதுவும் நடக்கவில்லை. அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆஸ்திரேலியா- இங்கிலாந்து வீரர்கள் யாரும் சூதாட்டத்தில் ஈடுபடவில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter