உலகக் கோப்பையை வென்ற ஜுனியர் அணிக்கு குவியும் பாராட்டுகளும், பரிசுகளும்

ஜூனியர் உலக கோப்பையை வென்ற இளைஞர்களுக்கு தலா ரூ. 20 லட்சமும், தலைமை பயிற்சியாளர் டிராவிட்டுக்கு ரூ. 50 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளார்.

ஜூனியர் உலக கோப்பையை வென்ற இளைஞர்களுக்கு தலா ரூ. 20 லட்சமும், தலைமை பயிற்சியாளர் டிராவிட்டுக்கு ரூ. 50 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளார். 

நியூசிலாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 47.2 ஓவரில் 216 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் விளையாடிய இந்தியா 38.5 ஓவரிலேயே 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 220 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர் மன்ஜோத் கல்ரா 102 பந்தில் 101 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த ஜூனியர் இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். மேலும், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், கும்ப்ளே, ரெய்னா உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இந்திய ஜூனியர் அணி உலகக்கோப்பையை வெல்லக் காரணமாக இருந்த டிராவிட்டுக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதேபோல, இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன், இளைஞர்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட டிராவிட்டுக்கே அனைத்துப் புகழும் சேரும் என சேவாக்  வாழ்த்து தெரிவித்து உள்ளார். இந்திய ஜூனியர் அணிக்குப் பாராட்டுவிழா நடத்தப்படும் என பிசிசிஐ தற்காலிக தலைவர் சி.கே கண்ணா கூறியுள்ளார்.

இதனிடையே, சிறப்பாக செயல்பட்ட ஜூனியர் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுக்கு தலா 30 லட்சம் ரூபாயும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு 50 லட்சம் ரூபாயும், டிராவிட் குழுவினருக்கு தலா 20 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Newsletter