9 நாடுகளில் சதம் விளாசி சாதனை படைத்த கோலி

இந்தியா உள்பட 9 நாடுகளில் செஞ்சூரி அடித்த வீரர் என்ற சாதனையை இந்திய கேப்டன் விராட்கோலி படைத்துள்ளார்.

இந்தியா உள்பட 9 நாடுகளில் செஞ்சூரி அடித்த வீரர் என்ற சாதனையை இந்திய கேப்டன் விராட்கோலி படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டர்பனில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் விராட்கோலி சதம் அடித்தார். முதல் முறையாக அந்நாட்டில் சதம் எடுத்தார். இதன்மூலம், சொந்த மண் உள்பட 9 நாடுகளில் செஞ்சூரி அடித்த வீரர் என்ற சாதனையை விராட்கோலி படைத்தார். à®’ருநாள் போட்டியில் விளையாடும் அனைத்து நாடுகளிலும் (முழுநேர உறுப்பினர்) சதம் அடித்தவர் என்ற முத்திரையை அவர் பதித்தார்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, நியூசிலாந்து, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் செஞ்சூரி அடித்துள்ளார். பாகிஸ்தானில் விளையாடவில்லை. தெண்டுல்கர், ஜெயசூர்யா ஆகியோருடன் விராட்கோலி இணைந்தார். இருவரும் 9 நாடுகளுக்கு எதிராக சதம் அடித்து இருந்தனர். தெண்டுல்கர் வெஸ்ட்இண்டீஸ் மண்ணிலும், ஜெயசூர்யா ஜிம்பாப்வே மண்ணிலும் சதம் அடிக்கவில்லை. விராட்கோலி வெளிநாட்டு மண்ணில் 19 சதம் அடித்துள்ளார்.

இதேபோல,  இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் சாதனையையும் கோலி சமன் செய்துள்ளார். கங்குலி கேப்டனாக 142 போட்டிகளில் விளையாடி 11 சதம் விளாசியிருந்தார்.  ஆனால், விராட் கோலி 41 போட்டிகளிலேயே 11 சதத்தை அடித்துள்ளார். கேப்டனாக அதிகம் சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (22 சதம்), முதலிடத்திலும், தென்னாப்ரிக்காவின் டிவில்லியர்ஸ் (13 சதம்) 2-வது இடத்திலும் உள்ளனர். 

Newsletter