ஒருநாள் போட்டி தரவரிசை: தெ.ஆப்ரிக்கா தொடரைக் கைப்பற்றி முதலிடத்தை பிடிக்குமா இந்தியா..?

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்குமா? என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா: விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்குமா? என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 6 போட்டிகள் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 1-ந் தேதி தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த ஒருநாள் தொடரை 4-2 என்ற கணக்கில் கைப்பற்றினால் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்க முடியும். தற்போது, ஐ.சி.சி. தரவரிசையில் தென் ஆப்பிரிக்கா 121 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 119 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இங்கிலாந்து 116-புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

தென் ஆப்பிரிக்காவை பொருத்தவரை இந்தத் தொடரை சமன் செய்தாலே ‘நம்பர் ஒன்’ இடத்தில் நீடிக்கும். இந்திய அணி 1-5 என்ற கணக்கில் தொடரை இழந்தால் 3-வது இடத்துக்கு பின்தங்கி விடும். 

ஒருநாள் போட்டியில் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி 876 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா) 872 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) 827 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், இந்திய வீரர் ரோகித் சர்மா (816 புள்ளி) 4-வது இடத்திலும், பாகிஸ்தானைச் சேர்ந்த பாபர் ஆசம் (813 புள்ளி) 5-வது இடத்திலும் உள்ளனர். தோனி ஒரு இடம் பின்தங்கி 13-வது வரிசையிலும், தவான் 14-வது இடத்திலும் உள்ளனர்.  டூபிளசிஸ் 9 இடத்திலும், ஹசிம் அம்லா 10-வது இடத்திலும் நீடிக்கின்றனர். 

பந்துவீச்சு தரவரிசையில் இந்திய வீரர் பும்ரா (728 புள்ளி) 3-வது இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீரர் அக்ஷர் படேல் 10-வது இடத்தில் உள்ளார். இம்ரான் தாகீர் (தென் ஆப்பிரிக்கா) 743 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், போல்ட் (நியூசிலாந்து) 729 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

Newsletter