2018 ஐ.பி.எல். போட்டிக்கான அணிகளில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விபரம்

11-வது கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 7-ம் தேதி துவங்குகிறது. இதற்கான ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் நடக்கிறது. 2 நாட்கள் நடக்கும் இந்த ஏலத்தில் 361 இந்திய வீரர்கள் உட்பட 578 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர்.

ஜனவரி 27

11-வது கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 7-ம் தேதி துவங்குகிறது. இதற்கான ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் நடக்கிறது.  2 நாட்கள் நடக்கும் இந்த ஏலத்தில் 361 இந்திய வீரர்கள் உட்பட 578 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். இரண்டு வருட தடைக்கு பின் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த ஏலத்தில் கலந்து கொண்டுள்ளன. பெங்களூர் அணி கோலி, ஏபி டிவில்லியர்சையும், சென்னை அணி தோனி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜாவையும், ஐதராபாத் அணி டேவிட் வார்னர், புவனேஸ்குமாரையும், ராஜஸ்தான் அணி ஸ்டீவ் ஸ்மித்தையும், மும்பை அணி ரோகித்சர்மா, ஹர்திக் பாண்ட்யா, பும்ராவையும், கொல்கத்தா அணி சுனில் நரேனையும் தக்க வைத்து கொண்டது. 

இந்த நிலையில், முதல் நாள் வீரர்களின் ஏலம் நிறைவடைந்தது. இதில், ஒவ்வொரு அணியிலும் இடம்பிடித்துள்ள வீரர்களின் விபரங்களை தற்போது காணலாம்.

சென்னை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் : தோனி, ரெய்னா, ஜடேஜா, டூபிளசிஸ், ஹர்பஜன், டுவைன் பிரவோ, சேன் வாட்சன், கேதர் ஜாதவ், 

அம்பத்தி ராயுடு, இம்ரான் தஹுர், கரன் சர்மா.

டெல்லி அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் : கிரிஸ் மோரிஸ், ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர், கிளென் மேக்ஸ்வெல், கம்பீர், ஜெசன் ராய், கோலின் 

முன்ரோ, முகமது சமி, ரபாடா, அமித் மிஷ்ரா, பிரித்திவ் ஷா, ராகுல் திவேதியா, விஜய் சங்கர், ஹர்ஷல் படேல், அவஷ்கான்.

பஞ்சாப் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் : அக்ஷர் படேல், அஸ்வின், யுவராஜ்சிங், கருண்நாயர், கே.எல். ராகுல், டேவிட் மில்லர், ஆரோன் பின்ச், 

மார்கஸ் ஸ்டொயினிஸ், மாயங்க் அகர்வால், அன்கித்சிங் ராஜ்புத்.

கொல்கத்தா அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் : சுனில் நரேன், ஆன்ட்ரு ரசல், மிட்சல் ஸ்டார்க், கிறிஸ் லின், தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா, 

பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், சுப்மன் கில், இஷாங்க் ஜாக்கி, கமலேஷ் நாகர்கோட்டி, நிதிஷ் ரானா.

மும்பை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் : ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பும்ரா, பொல்லார்டு, முஷ்தபிஷுர் ரஹ்மான், கம்மின்ஸ், சூர்யகுமார் 

யாதவ், குருணல் பாண்டியா, இஷன் கிஷான்.

ராஜஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் : ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ரகானே, ஸ்டூவர்ட் பின்னி, சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், ராகுல் 

திரிபதி, ஆர்ச்சி ஷார்ட், ஜோப்ரா ஆர்ச்சர்.

பெங்களூரூ அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் : விராட் கோலி, டிவில்லியர்ஸ், சர்ஃபிராஷ்கான், மெக்கல்லம்,  கிரிஸ் வோக்ஸ், கோலி டி 

கிராண்ட்கோம், டி காக், உமேஷ் யாதவ், சஹால், வோரா, குல்வாண்ட் கெஜ்ரோலியா, அன்கெத் சவுத்ரி, நவ்தீப் சைனி.

ஐதராபாத் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் : டேவிட் வார்னர், புவனேஸ்வர் குமார், ஷிகர் திவான், ஷாகிப் அல் ஹசன், கனே வில்லியம்சன், 

மணீஷ் பாண்டே, பிராத்வொயிட், யூசுப் பதான், சஹா, ரஷித்கான், ரிக்கி புய், தீபக் ஹுடா, சித்தார்த் கவுல், டி. நடராஜன், பசில் தம்பி, சையத் ஹலீல் à®…கமது.

Newsletter