இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் : சிந்துவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் சாய்னா

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரின் அரையிறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முன்னேறியுள்ளார்.

ஜனவரி 26

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரின் அரையிறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முன்னேறியுள்ளார். 

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் சூப்பர்சீரிஸ் பாட்மிண்டன் தொடர் போட்டிகள் 23-ம் தேதி தொடங்கின. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகளான சாய்னா நேவாலும், பி.வி.சிந்துவும் மோதினர். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சாய்னா முதல் செட்டை 21-13 என கைப்பற்றினார். தொடர்ந்து, 2-வது செட்டிலும் ஈடுகொடுக்க முடியாமல் சிந்து திணறினார். இருப்பினும், ஒருகட்டத்தில் இருவரிடைய கடும் சவால் ஏற்பட்டது. இறுதியில். சிறப்பாக விளையாடிய சாய்னா இரண்டாவது செட்டையும் 21-19 என கைப்பற்றினார். இதன்மூலம் 21-12, 21-18 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சாய்னா நேவால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். 

Newsletter