ஆஸ்திரேலியா ஓபன் : இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பெடரர்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஜனவரி 26

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.  

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. அதில் 2-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர், தரநிலை பெறாத கொரிய வீரர் சங்-ஐ எதிர்கொண்டார்.

இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய பெடரர், முதல் செட்டை 6-1 எனக் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் பெடரர் அதிரடி ஆட்டத்தை வெளிகாட்டினார்.  ஆனால், சங் காயம் காரணமாக இப்போட்டியில் இருந்து இடையிலேயே விலகினார். இதனால், பெடரர் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் - மரின் சிலிச் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

Newsletter