இந்தோனேசியா பாட்மிண்டன் போட்டி : காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனைகள்

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் காலிறுதிக்குள் நுழைந்தார்.


ஜனவரி 25

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சாய்னா, சிந்து காலிறுதிக்குள் நுழைந்தனர். 

தலைநகர் ஜகார்தாவில் நடைபெற்று வரும் இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா, சீனாவின் சென் சியாக்சினுடன் மோதினார். ஆரம்ப முதலே ஆக்ரோஷமாக செயல்பட்ட சாய்னா, முதல்செட்டை 21-12 எனக் கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய அவர், 2-வது செட்டையும் 21-18 என தன்வசப்படுத்தினார். இதன்மூலம், 21-12, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். 

மற்றொரு ஆட்டத்தில், ஆட்டத்தில் மூன்றாம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, மலேசியாவின் கோ ஜின் வேய்யை எதிர்கொண்டார்.

இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய சிந்து முதல் செட்டை 21-12 என கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சிந்து இரண்டாவது செட்டையும் 21-9 என எளிதாக கைப்பற்றினார். இதன்மூலம் 21-12, 21-9 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சிந்து காலிறுதிக்குள் நுழைந்தார்.  

ஆண்கள் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் சாட்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, 21-17, 21-16 என்ற நேர்செட் கணக்கில் சீன தைபேயின் லியாயு, சூசெங் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. 

Newsletter