தடுப்புச் சுவராக மாறிய புஜாரா: 54-வது பந்தில் முதல் ரன்னை குவித்தார்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 54-வது பந்தில் முதல் ரன் எடுத்த புஜாராவை, சக வீரர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர்.

ஜனவரி 24

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 54-வது பந்தில் முதல் ரன் எடுத்த புஜாராவை,  சக வீரர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே, 2 போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி à®œà¯‹à®•ன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் இன்று துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 

இந்திய அணிக்கு முரளி விஜய், லோகேஷ் ராகுல் மோசமான துவக்கம் தந்தனர். பிலாண்டர் பந்தில் ராகுல் டக்–அவுட்டானார். ரபாடா ‘வேகத்தில்’ முரளி விஜய் (8) விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால், 20 ரன்கள் எடுப்பதற்குள் இந்திய அணி தொடக்க விக்கெட்டுகளை தடுமாறியது. இதனால், 3-வது விக்கெட்டுக்கு களம் புகுந்த புஜாரா மேற்கொண்டு விக்கெட்டுக்களை இழக்காமல் இருப்பதில் கவனம் செலுத்தினார். தென்னாப்ரிக்கா பந்துவீச்சாளர்கள் வீசும் வேகத்தை தடுத்து நிறுத்தி நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

அவர், 50 பந்துகளை சந்தித்த நிலையிலும் ஒரு ரன் கூட குவிக்கவில்லை. உணவு இடைவேளைக்குமுன், இந்திய அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா தனது 54-வது பந்தில் முதல் ரன்னை எடுத்ததார். அப்போது, அவரது தடுப்பாட்டத்தை பாராட்டும் வகையில், பெவிலியனில் இருந்த சகவீரர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர். 

Newsletter