ஐ.பி.எல் போட்டிகளின் நேரம் மாற்றியமைப்பு: அணியின் உரிமையாளர்கள் எதிர்ப்பு

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் நேரம் மாற்றத்துக்கு அணியின் உரிமையாளர்கள் கிரிக்கெட் வாரியத்திடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 23

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் நேரம் மாற்றத்துக்கு அணியின் உரிமையாளர்கள் கிரிக்கெட் வாரியத்திடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ந்தேதி தொடங்கி மே 27-ந்தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டி தொடரும் நேரத்தில் மாற்றம் செய்வது என்று ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழுவில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முன்பு மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணிக்கு போட்டிகள் தொடங்கும். இனி மாலை 4 மணிக்கு பதிலாக 5.30 மணிக்கும், இரவு 8 மணிக்கு பதிலாக முன்னதாக 7 மணிக்கும் தொடங்குவது என்றும் முடிவு செய்துள்ளது.

ஐ.பி.எல் நேரம் மாற்றத்துக்கு அணியின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 3 அணிகளின் உரிமையாளர்கள் தங்களது எதிர்ப்பை கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளனர்.  ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ள ஸ்டார் நிறுவனம் இந்த நேரம் மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்டது. ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டம் மற்றும் இறுதிப்போட்டி மும்பை கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.

Newsletter