தென்னாப்ரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ரகானேவுக்கு வாய்ப்பு..! லோகுஷ் ராகுல் சந்தேகம்

தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ரகானேவுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 22

தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ரகானேவுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் கேப்டவுனில் நடந்த முதல் போட்டியில் 72 ரன் வித்தியாசத்திலும், செஞ்சூரியனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 135 ரன் வித்தியாசத்திலும் தோல்வியடைந்து, இந்தியா தொடரை இழந்தது.

இந்த நிலையில், இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 24-ந்தேதி ஜோகன்ஸ்பர்க்கில் தொடங்குகிறது. முதல் 2 டெஸ்டில் 11 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்காத ரகானேவுக்கு இந்த டெஸ்டில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னாப்ரிக்கா பயணத்தில் இந்தியாவின் பேட்டிங் மோசமாக இருக்கிறது. பந்துவீச்சு சிறப்பாக இருந்தும், பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இரண்டு டெஸ்டிலும் தோல்வி ஏற்பட்டது.

இதனால், ரகானேவுக்கு வாய்ப்பு கொடுக்க கேப்டன் விராட் கோலி முடிவு செய்துள்ளார். ரோகித் சர்மாவின் ஆட்டம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், இந்தப் போட்டியில் அவர் முன்வரிசையில் களம் இறக்கப்படுகிறார். முதல் 2 டெஸ்டில் அணியின் துணை கேப்டனான ரகானே நீக்கப்பட்டதால் கடும் விமர்சனம் எழுந்தது. வீரர்கள் தேர்வில் கோலி மாற்றம் செய்தது எந்த பலனும் இல்லாமல் போனது. இதனால், ரகானேவை 11 பேர் கொண்ட அணியில் களம் இறக்க அவர் முடிவு செய்துள்ளார்.

காயம் காரணமாக இந்திய அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் கடைசி போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவருக்கு பதிலாக ரகானே ரகானே களமிறக்கப்படுவார் எனத் தெரிகிறது. மேலும், புவனேஷ்வர் குமாரும் அணிக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல, தென்னாப்ரிக்கா வீரர் பவுமா காயம் காரணமாக 3-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். உள்ளூர் போட்டியின் போது அவருக்கு கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. முதல் 2 டெஸ்டிலும் அவர் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை. 

Newsletter