கடைசி டெஸ்டில் சகாவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்ப்பு

காயம் அடைந்த சகாவிற்குப் பதிலாக தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டெஸ்டிற்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜனவரி 16

காயம் அடைந்த சகாவிற்குப் பதிலாக தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டெஸ்டிற்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கேப் டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தற்போது செஞ்சூரியனில் 2-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் முடிந்த பின்னர் இந்தியா பயிற்சி மேற்கொண்டபோது விக்கெட் கீப்பர் சகாவிற்கு இடது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் மாற்று விக்கெட் கீப்பரான பார்தீவ் பட்டேல் செஞ்சூரியனில் களமிறங்கினார். 

முதல் இன்னிங்சில் 19 ரன்கள் சேர்த்த பார்தீவ் பட்டேல், கீப்பர் பணியின்போது சில கேட்சுகளைப் பிடிக்கத் தவறினார். இதனால் அவர் மீது இந்திய அணி நிர்வாகம் அதிருப்தியடைந்துள்ளது. அதேவேளையில், சகா 3-வது போட்டிக்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தினேஷ் கார்த்திக் 3-வது போட்டிக்கு முன் இந்திய அணியில் இணைவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Newsletter