விராட் கோலிக்கு 25 சதவீதம் அபராதம் விதிப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது, விதிகளை மீறி ஆக்ரோஷமாக செயல்பட்டதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஐ.சி.சி. அபராதம் விதித்துள்ளது.

ஜனவரி 16 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் போது, விதிகளை மீறி ஆக்ரோஷமாக செயல்பட்டதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஐ.சி.சி. அபராதம் விதித்துள்ளது. 

செஞ்சூரியனில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டதால் சிறிதுநேரம் ஆட்டம் தடைப்பட்டு மீண்டும் தொடங்கியது. மைதானத்தில் ஈரப்பதம் இருப்பதாகக் கூறிய விராட் கோலி, இதனால் பந்து சேதமடைவதாக நடுவர்களிடம் தொடர்ச்சியாக முறையிட்டார். ஆனால், நடுவர்கள் செவி சாய்க்காததால், விராட் கோலி ஆக்ரோஷத்துடன் பந்தை மைதானத்தில் எறிந்தார். விராட் கோலியின் செயல்பாடு விதிமுறை மீறிய வகையில் இருப்பதாகக் கூறிய ஐசிசி, போட்டியின் சம்பளத்தில் 25 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது.

Newsletter