ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : காலிறுதியில் இந்திய அணி

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் பாப்புவா நியூ கினியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது.

ஜனவரி 16

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் பாப்புவா நியூ கினியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது. 

 

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஜீனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில் பங்கு பற்றவுள்ள 16 அணிகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பி பிரிவுக்கான போட்டியில் இந்தியா மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதியுள்ளன.

முதலில் களமிறங்கிய பப்புவா நியூ கெனியா இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. அந்த அணி 21.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 64 ரன்களை மட்டுமே எடுத்தது. பப்புவா நியூ கினியா அணியை சேர்ந்த 3 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். 5 வீரர்கள் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் அபாரமாகப் பந்துவீசிய ராய் 5 விக்கெட்களை வீழ்த்தினார். 

65 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு, கேப்டன் ப்ரித்தீவ் ஷா அதிரடி காட்டினார். இதனால், 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. ப்ரித்தீவ் ஷா 39 பந்துகளில் 57 ரன்களை குவித்தார். ஏற்கனவ, இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது. இதன்மூலம், தொடர்ந்து, 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது. 

வரும் வெள்ளிக்கிழமை ஜிம்பாப்வே அணியுடன், இந்திய அணி மோதவுள்ளது. பி பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

Newsletter