ஐ.பி.எல்: யூசுப் பதானின் அடிப்படை விலை ரூ.75 லட்சம்

ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கிய இந்திய வீரர் யூசுப் பதானின் அடிப்படை விலை ரூ. 75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 11

ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கிய இந்திய வீரர் யூசுப் பதானின் அடிப்படை விலை ரூ. 75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் 'ஆல் - ரவுண்டர்' யூசுப் பதான் (35). கடைசியாக, 2012ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஜோகனஸ்பர்க்கில் நடந்த 'டுவென்டி-20' போட்டியில் விளையாடிய அணியில் இடம்பிடித்திருந்தார். இருப்பினும், பரோடா அணி சார்பில் உள்ளூர் போட்டியில் பங்கேற்று வருகிறார். ஐ.பி.எல்., தொடரில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ளார். 

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் இந்திய கிரிக்கெட் வாரியத்தால், (பி.சி.சி.ஐ.,) ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. யூசுப் பதானின் சிறுநீர் மாதிரி சோதனை செய்யப்பட்டது. இதில், தடை செய்யப்பட்ட மருந்து கலந்திருந்தது தெரியவந்துள்ளது. இதனால், இவருக்கு 5 மாதம் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் அவர் பங்கேற்பாரா என சந்தேகம் நிலவி வந்தது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதியில் இருந்து தொடங்கிய அவரது தடை காலம் வருகிற 14-ந் தேதி முடிவடைகிறது. இதனால், இந்த ஆண்டு நடக்கும் ஐ.பி.எல். போட்டியில் ஆடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டியில் அவரது அடிப்படை விலை ரூ.75 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வருகிற 26-ந் தேதி, 27-ந் தேதி நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் அவர் இடம் பெறுவார். அதிகபட்ச அடிப்படை விலையான ரூ.2 கோடி பட்டியலில் காம்பீர், ஹர்பஜன்சிங் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

Newsletter