கேப்டவுன் டெஸ்ட்டில் தெ.ஆப்ரிக்கா 286 ரன்களுக்கு ஆல்அவுட் : இந்திய அணி தடுமாற்றம்

ஜனவரி 05

கேப்டவுனில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில்  தென் ஆப்ரிக்கா அணி 286 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முன்னணி விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகிறது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கேப்டவுனில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டுபிளசி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். 

இந்திய பந்து வீச்சாளர்கள் அபராமாக பந்து வீசி, தென் ஆப்ரிக்க அணியை முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. தென் ஆப்ரிக்க அணியில் அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 65 ரன்களும், கேப்டன் டுபிளஸிஸ் 62 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் மற்றும் ஷமி, பும்ரா, பாண்ட்யா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இதனையடுத்து,  தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முரளி விஜய் 1 ரன்னிலும், தவான் 16 ரன்னிலும்.கேப்டன் கோலி 5 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. இந்திய அணி  3 விக்கெட்டுக்கு 28 ரன்கள் எடுத்திருந்த போது, முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.தென்னாபிரிக்கா அணி சார்பில் பிலாண்டர், மொர்னே மார்க்கல், ஸ்டெயின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

Newsletter