புத்தாண்டை வெற்றியுடன் தொடங்கியது சென்னை சிட்டி எஃப்சி அணி

ஐ லீக் கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த மோகன்பகான், அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சென்னை சிட்டி எஃப்சி அணி வெற்றி பெற்றது.

கோவை, ஜனவரி 03: 

ஐ லீக் கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த மோகன்பகான், அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சென்னை சிட்டி எஃப்சி அணி வெற்றி பெற்றது. 



சென்னை சிட்டி கால்பந்து கிளப் சார்பில், தேசிய அளவிலான சிறந்த 10 அணிகள் மோதும் லீக் போட்டிகள், கோவை நேரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், கொல்கொத்தா ஈஸ்ட்பெங்கால் கிளப், மோகன்பகான், கோவா சர்ச்சில் பிரதர்ஸ், இம்பால் நெரோகா கால்பந்து கிளப், ஐஸ்வால் கால்பந்து கிளப், பஞ்சாப் மினர்வா கிளப், கேரளா கோகுலம் கிளப், இந்தியன் ஏரோஸ், ஷில்லாங் கால்பந்து கிளப், சென்னை சிட்டி கால்பந்து கிளப் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன. 



இந்த நிலையில், நேற்றைய லீக் ஆட்டத்தில், பலம் வாய்ந்த மோகன்பகான் அணியை சென்னை சிட்டி எஃப்சி அணி எதிர்கொண்டது. புத்தாண்டு பிறந்ததைத் தொடர்ந்து, மோதும் முதல் போட்டி என்பதால், இந்த ஆண்டை சென்னை அணி வெற்றியுடன் தொடங்குமா என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். 



அதற்கேற்றவாறே, சென்னை வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சென்னை வீரர் ஜோச்சிம் அணிக்கு முதல் கோலை அடித்து, அணிக்கு à®®à¯à®©à¯à®©à®¿à®²à¯ˆ பெற்றுத் தந்தார். ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் விதிமுறைகளை மீறியதாக சென்னை வீரருக்குச் சிகப்பு அட்டைக் கொடுத்து வெளியேற்றப்பட்டார். இதற்கு அடுத்த நிடத்தில் மோகன்பகான் அணியின் பதில் கோலை அடித்து போட்டியை சமன் செய்தார். இதன்மூலம் போட்டியில் பரபரப்பு அதிகரித்தது. 



இந்த நிலையில், போட்டியின் 71-வது நிமிடத்தில் சென்னை வீரர் சுமிகோ மற்றொரு கோலை அடித்து அணியை முன்னிலைப் பெறச் செய்தார். பின்னர், இறுதிவரை மோகன்பகான் அணியை கோல் அடிக்கவிடாமல் சென்னை வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில், 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சென்னை சிட்டி எஃப்சி அணி வெற்றி பெற்றது. 

Newsletter