இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி சமன்

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது.

டிசம்பர் 30

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது.  இதில், 3 போட்டிகளில் வெற்றி பெற்று போட்டியை நடத்தும் ஆஸ்திரலிய அணி தொடரை ஏற்கனவே வென்று விட்டது. 

இந்த நிலையில், 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்தது. இதில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 327 ரன்கள் எடுத்தது. அதனை அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி, குக்கின் இரட்டை சதத்தால் 491 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து, 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று 5வது நாளில் ஆட்டத்தினை முடித்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.  

ஆஸ்திரேலியா 99 ரன்களுடன் முன்னிலையில் இருந்தது. கேப்டன் ஸ்மித் 102 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இது இந்தத் தொடரில் அவரது 3வது டெஸ்ட் சதம் ஆகும். இதனால், போட்டி சமனில் முடிந்தது. இறுதி மற்றும் 5வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஜனவரி 4ந்தேதி சிட்னி நகரில் நடைபெற உள்ளது.

Newsletter