தெ.ஆப்ரிக்கா அணி அறிவிப்பு : ஸ்டெயின், டு பிளிசிஸ், டி காக், மோரிஸ் இடம்பிடிப்பு

டிசம்பர் 29

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டிற்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டடுள்ளது. அணியில் ஸ்டெயின், கிறிஸ் மோரிஸ், டு பிளிசிஸ், டி காக் இடம் பிடித்துள்ளனர். 

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக இந்திய அணி நேற்றிரவு தென்ஆப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் சென்றடைந்தது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி கேப் டவுனில் வருகிற 5-ம் தேதி தொடங்குகிறது. 

இந்த நிலையில், இந்தியாவிற்கு எதிரான முதல் போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்கு நாள் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இடம்பெறாத கேப்டன் டு பிளிசிஸ், ஸ்டெயின் ஆகியோரும், காயம் காரணமாக விலகிய குயின்டான் டி காக்கும், இங்கிலாந்து தொடரின்போது காயத்தால் அவதிப்பட்ட கிறிஸ் மோரிஸும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. டு பிளிசிஸ் (கேப்டன்), 2. ஹசிம் அம்லா, 3. டெம்பா பவுமா, 4. குயின்டான் டி காக், 5. தெயுனிஸ் டி ப்ருயின், 6. டி வில்லியர்ஸ், 7. டீன் எல்கர், 8. கேஷவ் மகாராஜ், 9. ஏய்டன் மார்கிராம், 10. மோர்னே மோர்கல், 11. கிறிஸ் மோரிஸ், 12. பெலுக்வாயோ, 13. வெர்னோன் பிலாண்டர், 14. காகிசோ ரபாடா, 15. டேல் ஸ்டெயின்.

தென்ஆப்பிரிக்கா அணி புத்தாண்டை கொண்டாடிவிட்டு 2-ந்தேதியில் இருந்து பயிற்சியை மேற்கொள்ள இருக்கிறது.

Newsletter