உலக துரித செஸ் சாம்பியன்ஷிப் : இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன்

சவுதி அரேபியாவில் நடைபெற்ற உலக துரித செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் பட்டத்தை கைப்பற்றினார்.

டிசம்பர் 28

சவுதி அரேபியாவில் நடைபெற்ற உலக துரித செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் பட்டத்தை கைப்பற்றினார்.

உலக துரித செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் நடப்பு உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் பலமுறை உலக சாம்பியன்ஷிப் பட்டங்கள் பெற்ற இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மோதினர். இந்த போட்டியின் 9 வது சுற்றில் ஆனந்த் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார். மொத்தம் 9 புள்ளிகளுக்கு ஆனந்த் 7 புள்ளிகள் பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றார். ஆனந்த் விளையாடிய 9 சுற்றுகளில் 5 சுற்றுகளில் வெற்றி பெற்றார்.

ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த், பத்மஶ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் என பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter