ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 2-வது இடத்திற்கு முன்னேற்றம்


டிசம்பர் 25

இலங்கையை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி, ஐசிசி தரவரிசைப் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இலங்கை அணி மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்பதற்காக இந்தியா வந்தது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணியிடம் இலங்கை பறிகொடுத்தது. இதைத் தொடர்ந்து, இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதின.

இதில், கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்திலும், மத்திய பிரதேசத்தில் 2-வது போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்திலும், மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த கடைசிப் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி ஒயிட்வாஷ் செய்தது. இதன்மூலம், தரவரிசைப் பட்டியலில் 4-வது இடத்தில் இருந்து, 121 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

124 புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் (120) 3-வது இடத்திலும், நியூசிலாந்து (120) 4-வது இடத்திலும், இங்கிலாந்து (119) 5-வது இடத்திலும் உள்ளன.

Newsletter