காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் : இந்தியாவின் சாக்சி மாலிக் தங்கம் வென்று சாதனை

டிசம்பர் 18

காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

தென் ஆப்ரிக்காவில் நேற்று தொடங்கி நடைபெற்று வரும் இப்போட்டியில், இந்திய அணியின் சார்பில் மொத்தம் 60 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில், இன்று நடைபெற்ற காமன்வெல்த் மல்யுத்த போட்டி மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்சி மாலிக் 63 கிலோ எடைப் பிரிவில் நியூசிலாந்து வீராங்கனை டைலாவை 13-2 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.

Newsletter