தேசிய அளவிலான தடகளப் போட்டி : பாரதியார் பல்கலையைச் சேர்ந்த மாணவி தங்கம் வென்று சாதனை

கோவை, டிசம்பர் 16

ஆந்திராவில் நடைபெற்ற தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியின் நீளம் தாண்டுதலில் கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவி தங்கம் வென்றார். 

2017-2018 ஆம் ஆண்டிற்கான நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஆச்சாரியா நாகர்ஜுனா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளை முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடையே விளையாட்டுப் போட்டிகள் சென்றடையச் செய்ய வேண்டும் என்றார். 

நாடு முழுவதும் உள்ள சுமார் 220 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஏராளமான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில், நீளம் தாண்டுதல் போட்டியில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பிஎஸ்ஜிஆர்கேசி கல்லூரியின் மாணவி புஷ்பாஞ்சலி கலந்து கொண்டு தங்கம் வென்றார். அவருக்குப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர். 

Newsletter