இந்தியக் கிரிக்கெட் வீரர்களின் கோரிக்கைக்கு பச்சைக்கொடி : ஊதியம் 100 சதவீதம் உயர வாய்ப்பு

டிசம்பர் 15

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அடுத்த சீசன் முதல் ஊதியம் 100 சதவீதம் அதிகரிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதியம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை விவாதிப்பதற்காக உச்சநீதிமன்றத் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட நிர்வாகிகளின் கமிட்டி, வீரர்களின் சம்பள உயர்வுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது.

நடப்புமுறையில், பிசிசிஐக்கு வரும் ஆண்டு வருமானத்தில் 26 சதவீதம், வீரர்களுக்கு  ஊதியமாக பிரித்தளிக்கப்படுகிறது. சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு 13 சதவீதம், உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு 10.6 சதவீதம் மீத பங்கை, வீராங்கனைகள் மற்றும் ஜூனியர் வீரர்களுக்கு தற்போது பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. நிர்வாகிகளின் கமிட்டி பரிந்துரைத்த புதிய செயல்திட்டம் அடுத்த சீசனில் அமலுக்கு வரும்பட்சத்தில், வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் ஊதியம்  இருமடங்காக அதிகரிக்கும். 

நடப்பு ஆண்டில் 46 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தற்போது வரை ரூ. 5.51 கோடி ஊதியமாக பெற்றுள்ளார். புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டால், இது ரூ.10 கோடியாக அதிகரிக்கும். இதன்மூலம், சர்வதேச போட்டிகள், பிரீமியர் கிரிக்கெட் போட்டிகள், ரஞ்சி தொடர் என பெரும்பாலான தொடர்களில் பங்கேற்று வரும் கோலிக்கு, இனி ஆண்டு ஊதியம்  ரூ. 30 கோடியாக அதிகரிக்கும்.

Newsletter