தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் ஆப்கானிஸ்தான்

டிசம்பர் 11

ஐசிசியின் டெஸ்ட் அந்தஸ்த்தைப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியில், ”நம்பர் ஒன்” அணியான இந்தியாவை எதிர்கொள்கிறது.

பிசிசிஐயின் பொதுக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய அணியின் எதிர்கால சுற்றுப்பயணங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.  இந்தச் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 5 ஆண்டுகளில் 158 போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் கால அட்டவணை தயாராகி உள்ளது. இதில், 81 போட்டிகள் இந்தியாவில் நடைபெறும்.  இந்தக் கால அட்டவணையில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடம்பெற்று உள்ளன.

ஆப்கானிஸ்தான் அணி தன்னுடைய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், நம்பர் ஒன் அணியான இந்தியாவை எதிர்கொள்கிறது. கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஐசிசி டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. ஜூன் மாதத்தில் இருந்து 5 ஆண்டுகள் விவோ ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. உலகளாவிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான விவோ ரூ. 2,199 கோடி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter