பார்முலா-1 கார்பந்தயம் : உலக சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தனதாக்கினார் லிவீஸ் ஹாமில்டன்

டிசம்பர் 09

பிரான்சில் உள்ள அரண்மனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பார்முலா-1 உலக சாம்பியன்ஷிப் டிராபியை பிரபல கார்பந்தய வீரர் லிவீஸ் ஹாமில்டன் பெற்றார். 

கார்பந்தய போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது ‘பார்முலா 1’ கார்ப்பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான பார்முலா ஒன் சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்து வீரரான ஹாமில்டன் பட்டம் வென்றார். 32 வயதான ஹாமில்டன் பார்முலா1 சாம்பியன்ஷிப் பட்டத்தை ருசிப்பது இது 4–வது முறையாகும். 

ஏற்கனவே, 2008, 2014, 2015 ஆண்டுகளிலும் அவர் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். இந்த ஆண்டு முழுவதும் வலுவாகச் செயல்பட்ட ஹாமில்டன் பட்டம் வெல்வதற்குத் தகுதியானவர் என்று வெட்டல் பாராட்டினார். 

இந்த நிலையில், பிரான்சில் உள்ள அரண்மனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு உலக சாம்பியன்ஷிப் டிராபி வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக அமைந்தது. அதேபோல, வருகின்ற ஆண்டுகளும் அமையக் கடினமாக உழைப்பேன். இவ்வாறு தனது ரசிகர்களிடம் கூறினார். ஹாமில்டன் இந்த ஆண்டு நடைபெற்ற 20 போட்டிகளில் 9-ல் வெற்றி பெற்றார். 

இந்த மகுடத்தை அதிக முறை சூடியவர்களின் பட்டியலில் ஜெர்மனியின் மைக்கேல் ஷூமாக்கர் (7 முறை), அர்ஜெண்டினாவின் ஜூவான் மானுல் பாங்கியோ (5 முறை) ஆகியோருக்கு அடுத்து பிரான்சின் அலைன் புரோஸ்ட், ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டலுடன் (இருவரும் தலா 4 முறை) ஹாமில்டன் 3–வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Newsletter