உலக ஹாக்கி லீக் தொடரின் அரையிறுதியில் இந்தியா - அர்ஜெண்டினா இன்று மோதல்

டிசம்பர் 8

உலக ஹாக்கி லீக் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, பலம் வாய்ந்த அர்ஜெண்டினாவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது.

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்று வரும் உலக ஹாக்கி லீக் பைனல் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் லீக் சுற்றில் ஒரு வெற்றி கூட பெறாத இந்திய அணி (1 சமன், 2 தோல்வி) பி பிரிவில் கடைசி இடம் பிடித்தது. இதனால், காலிறுதியில் இந்திய அணி, ஏ பிரிவில் 3 வெற்றியுடன் முதலிடம் பெற்ற பெல்ஜியத்தை எதிர்கொண்டது. 

வழக்கத்துக்கு மாறாக இந்திய வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். இதையடுத்து, ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பெல்ஜியத்தை, உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இந்திய அணி, சடன் டெத் முறையில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. நேற்று நடந்த மற்றொரு காலிறுதியில் அர்ஜெண்டினா, 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இதையடுத்து, இன்று நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி, ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற, உலகின் நம்பர் -1 அணியான அர்ஜெண்டினாவை எதிர்கொள்கிறது. 

Newsletter