உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவின் காஞ்சன்மலா பாண்டே தங்கம் வென்று சாதனை

டிசம்பர் 08

உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரின் 200 மீட்டர் மெட்லே போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த காஞ்சன்மலா பாண்டே தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மெக்சிகோவில் உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவின் நாக்பூரைச் சேர்ந்தவரும், ரிசர்வ் வங்கி ஊழியருமான காஞ்சன்மலா பாண்டே (26), எஸ்-11 பிரிவில் 200 மீட்டர் மெட்லே போட்டியில் கலந்து கொண்டார். அவர், முதன் முதலாகத் தங்கம் வென்று சாதனைப் படைத்து உள்ளார்.

மேலும், பெண்கள் பிரிவில் தகுதி பெற்ற ஒரே இந்திய வீரர் இவர் ஆவார். துரதிருஷ்டவசமாக, அவர் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தவறவிட்டார். பேக் ஸ்ட்ரோக் பிரிவில் 5-வது இடத்திற்கு வந்தார்.

இது குறித்து தங்கமங்கை காஞ்சன்மலா பாண்டே கூறியதாவது:- நான் உலக சாம்பியன்ஷிப்பை எதிர்பார்த்து நன்கு தயாராகி இருந்தேன். மெக்சிகோவில் ஒரு நல்ல நிகழ்வை எதிர்பார்த்தேன். ஒரு பதக்கம் கிடைத்தது. உலக சாம்பியன்ஷிப்பில் முதல்நிலை மற்றும் ஒரு தங்கப்பதக்கம் பெறுவது வியப்புக்குரியது. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதே நேரத்தில், அதை வார்த்தைகளில் எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை என்றார்.

Newsletter