2018-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை

ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியதால்  2018-ம் ஆண்டு குளிர் கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யா வீரர், வீராங்கனைகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு ரஷ்யாவின்  சோச்சி மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. இதில், ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து உட்கொண்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, அந்நாட்டு ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு விசாரணை நடத்தி அறிக்கை சமர்பித்தது. அதில், ரஷ்ய வீரர்கள்  ஊக்கமருந்து உட்கொண்டது உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில்,   à®šà®°à¯à®µà®¤à¯‡à®š ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் நடந்தது. இதில், ரஷ்ய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு அளித்த அறிக்கையின்படி, ரஷ்ய வீரர், வீராங்கனைகள் தென்கொரியாவின் பையோங்சாங்க் நகரில் 2018-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத்  தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Newsletter