டெஸ்டில் ஒரே நாளில் பல சாதனைகளை நிகழ்த்திய விராட் கோலி

டிசம்பர் 02

இலங்கைக்கு எதிரான தில்லி கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசிய கோலி, தனது 20-வது சதத்தைப் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் ஒரே நாளில் அவர் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் தில்லி ஃபெரேஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி, விராட் கோலி சதமடித்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார். இது அவருடைய 20-வது டெஸ்ட் சதமாகும். மேலும், குறைந்த இன்னிங்ஸ் விளையாடிய வீரர்களின் வரிசையில் கோலி 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். 

குறைந்த இன்னிங்ஸில் 20 டெஸ்ட் சதங்கள் விளாசிய வீரர்களின் பட்டியல் :

55 இன்னிங்ஸ் - பிராட்மேன் 

93 இன்னிங்ஸ் - கவாஸ்கர் 

95 இன்னிங்ஸ் - ஹேடன்

99 இன்னிங்ஸ் - ஸ்டீவன் ஸ்மித் 

105 இன்னிங்ஸ் - விராட் கோலி 

அடுத்தடுத்த இன்னிங்ஸில் அதிக சதங்கள் எடுத்த இந்திய கேப்டன்கள் :

3 - கோலி - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2014/15

3* - கோலி, இலங்கைக்கு எதிராக, 2017/18

2 - ஹசாரே, கவாஸ்கர், அசாருதீன், சச்சின், டிராவிட்.

* மூன்று டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒவ்வொரு டெஸ்டிலும் சதங்கள் அடித்த முதல் கேப்டன் கோலியாவார். 2 முறை தொடர்ச்சியாக 3 இன்னிங்ஸில் சதங்கள் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். 2002-ல் டிராவிட் தொடர்ச்சியாக 3 இன்னிங்ஸில் சதமெடுத்தார். அதன்பிறகு இப்போதுதான் கோலி தொடர்ச்சியாக 3 இன்னிங்ஸிலும் சதமெடுத்துள்ளார். கோலி கேப்டனாக, டெஸ்ட் போட்டிகளில் 50 இன்னிங்ஸில் 13 சதங்களும், ஒருநாள் போட்டிகளில், 40 இன்னிங்ஸில் 10 சதங்களும் விளாசியுள்ளார். 

இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில், 52 பந்துகளில் அரை சதம் விளாசியதன் மூலம், அதிவேக டெஸ்ட் அரை சதமடித்துள்ளார். இதேபோல, 110 பந்துகளில் சதம் கண்ட கோலி, அதிவேக டெஸ்ட் சதத்தையும் பதிவு செய்தார். கோலியின் கடைசியாக எடுத்த ஆறு அரை சதங்களும் சதங்களாக மாறியுள்ளன. அதில் மூன்று இரட்டைச் சதங்கள்!

இந்த வருடம் இலங்கை அணிக்கு எதிராக 22 டெஸ்ட் சதங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 1984-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக 22 சதங்கள் எடுக்கப்பட்டன. அச்சாதனையை இலங்கை அணி சமன் செய்துள்ளது!

31-வது ஓவரின்போது 24 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த கோலி, பவுண்டரி அடித்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5,000 ரன்களை அவர் கடந்தார். இந்த இலக்கை எட்டும் 11-வது இந்தியர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். 105 இன்னிங்ஸில் இந்தச் சாதனையை படைத்துள்ளார். 

அதேபோல, 42 ரன்களில் இருந்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் 16,000 ரன்களைப் பூர்த்தி செய்தார் கோலி. மற்ற அனைத்து வீரர்களை விடவும் மிகவிரைவாக 350 இன்னிங்ஸில் இந்த ரன்களை எடுத்து சாதனை செய்துள்ளார்.

அதிவேக 5,000 டெஸ்ட் ரன்கள் :

ஸ்மித் - 97 இன்னிங்ஸ்

கோலி, ரூட் - 105 இன்னிங்ஸ்

ஆம்லா, வார்னர் - 109 இன்னிங்ஸ்

வில்லியம்சன் - 110

அதிவேக 5000 டெஸ்ட் ரன்கள் - இந்தியர்கள் :

கவாஸ்கர் - 95 இன்னிங்ஸ்

சேவாக் - 98 இன்னிங்ஸ்

டெண்டுல்கர் - 103 இன்னிங்ஸ்

கோலி - 105 இன்னின்ங்ஸ்

டிராவிட் - 108 இன்னிங்ஸ்

அதிக டெஸ்ட் ரன்கள் - இந்தியர்கள் :

சச்சின் - 15,921 ரன்கள்

டிராவிட் - 13,265 ரன்கள்

கவாஸ்கர் - 10,122 ரன்கள்

லக்‌ஷ்மண் - 8,781 ரன்கள்

சேவாக் - 8,503 ரன்கள்

கங்குலி - 7,212 ரன்கள்

வெங்சர்கார் - 6,868 ரன்கள்

அசாருதீன் - 6,215 ரன்கள்

விஸ்வநாத் - 6,080 ரன்கள்

கபில் தேவ் - 5,248 ரன்கள்

கோலி - 5,000 ரன்கள்*

அதிவேக 16,000 ரன்கள் :

விராட் கோலி - 350 இன்னிங்ஸ்

ஆம்லா - 363 இன்னிங்ஸ்

டெண்டுல்கர் - 376 இன்னிங்ஸ்

Newsletter