உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு தங்கம்

நவம்பர் 30

உலகப் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தியுள்ளார். இது, உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் முதல் பதக்கம் ஆகும்.

அமெரிக்காவின் அனாஹிமில் நடைபெற்ற 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மிர்பாய் சானு நாட்டின் முதல் பளு தூக்கும் பதக்கம் வென்றுள்ளார். 48 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 194 கிலோ எடையைத் தூக்கி அவர் தங்கப் பதக்கத்தை வென்றார். சானு 85 கிலோ ஸ்னாட்ச், 109 கிலோ கிளீன் மற்றும் ஜெர்க் என மொத்தம் 194 கிலோ தூக்கினார். இது, இந்திய பளுதூக்கும் வீரரால் உலக அரங்கில் அடையப்பெற்ற சாதனையாகும்.

1995-ல் சீனாவில் கர்ணம் மல்லேஸ்வரி தங்கம் வென்ற பிறகு, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும். 

இது குறித்து மீரா பாய் கூறியதாவது:- இந்த வெற்றிக்காக என் பயிற்சியாளர் விஜய் ஷர்மாவுக்கு நான் நிறையக் கடன்பட்டிருக்கிறேன். நாங்கள் கடினமாகவும், நம்பிக்கையுடனும் உழைத்தோம். இதை, 2020 டோக்கியோவில் இதே சாதனை நிகழ்த்த முடியும். இவ்வாறு அவர் கூறினார். மணிப்பூரில் ஒரு எளியக் குடும்பத்தில் இருந்து வந்த சானு, தற்போது இந்திய ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். 

மொத்தம் 193 கிலோ தூக்கி தாய்லாந்தைச் சேர்ந்த துண்யா சுக்சரோன் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி வென்றார். கொலம்பியாவைச் சேர்ந்த அனா ஐரிஸ் செகுரா 182 கிலோ தூக்கி வெண்கலம் வென்றார். இந்தியாவைச் சேர்ந்த சஞ்சிதா சானு 5-வது இடம் பிடித்தார்.

Newsletter