ஆஷஸ் முதல் டெஸ்ட்: 10 விக்., வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

நவம்பர் 27

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில், பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 302 ரன்கள் எடுத்தது.

பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய ஆஸ்திரேலியா, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சதத்தின் உதவியுடன் 328 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. 26 ரன்கள் பின்தங்கிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

170 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் வார்னர்(87), பேன்கிராப்ட்(82) இருவரும் அரைசதம் அடித்து கைகொடுக்க 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Newsletter