ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து போராடி தோல்வி

நவம்பர் 26

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து, சீன தைபே வீராங்கனையிடம் போராடித் தோல்வியைத் தழுவினார்.

ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி கெவ்லோன் நகரில் நடந்து வருகிறது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் உலக தரவரிசையில் 3–வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, முதல்நிலை வீராங்கனையான சீன தைபேவின் டாய் சூயிங்கை எதிர்கொண்டார். முதல் செட் தொடங்கியதுமே இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 

சிந்துவின் தவறுகளை புரிந்து கொண்ட டாய் சூயிங், முதல் செட்டை 18-21 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் டாய் சூயிங்கிற்கு சிந்து தக்க பதிலடி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதன்படி, முதல்பாதி ஆட்டத்தின் போது, 10-8 என்ற கணக்கில் பிவி சிந்து முன்னிலை பெற்றார். 

ஆனால், சுதாரித்து விளையாடிய டாய் சூ யிங், சிந்துவுக்கு கடும் சவாலாக விளங்கினார். ஒருகட்டத்தில், 18-12 என்ற நிலையை அடைந்த சீன தைபே வீராங்கனை, இறுதியில் 18-21 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு நடந்த இறுதிடப போட்டியிலும், சிந்து, டாய் சூயிங்கிடம் தோல்வியடைந்து 2-வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter