ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன்: இறுதிப் போட்டிக்கு சிந்து தகுதி

நவம்பர் 26

ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு இந்திய வீராங்கனை பிவி சிந்து முன்னேறினார்.

ஹாங்காங்கில் உள்ள கவ்லூன் பகுதியில் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் 3-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் சிந்து, 6-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனான் மோதினர். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய சிந்து, முதல் செட்டை  21-17 எனக் கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர், 2-வது செட்டை 21-17 என தன்வசப்படுத்தினார். 

மொத்தம் 43 நிமிடம் நீடித்த போட்டியில், அபாரமாக ஆடிய சிந்து 21-17, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். கடந்த ஆண்டு நடந்த இறுதியில் சிந்து, சீன தைபேயின் டாய் டிசூயிங்கிடம் தோல்வியடைந்து 2-வது இடம் பிடித்திருந்தார். இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான இறுதிப் போட்டியிலும் சிந்து, டாய் டிசூயிங் குடன் மீண்டும் மோத உள்ளார். 

Newsletter