ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் : காலிறுதியில் இந்திய வீராங்கனை சிந்து

நவம்பர் 23, 

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முன்னேறினார். 

ஹாங்காங்கில் உள்ள கவ்லூன் பகுதியில் சர்வதேச ஓபன் பேட்மிண்டன் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாது சுற்றில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்தியாவின் பி.வி. சிந்து, ஜப்பானின் அயா ஒஹோரியை எதிர்கொண்டார். முதல்செட்டை 21-14 என எளிதாக கைப்பற்றிய சிந்து, அடுத்த செட்டையும் 21-17 என வசப்படுத்தினார்.  39 நிமிடம் மட்டுமே நீடித்த போட்டியின் முடிவில், சிந்து 21-14, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

Newsletter