ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய வீராங்கனைகள்



நவம்பர் 22

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் சாய்னா, சிந்து ஆகியோர் வெற்றி பெற்றனர். 

சீனாவின் ஹாங்காங்கில் உள்ள கவ்லூன் பகுதியில் சர்வதேச ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாய்னா நேவால்,  டென்மார்க்கின் மெட்டே போல்சனை எதிர்கொண்டார். முதல் செட்டை 21-19 எனக் கைப்பற்றிய சாய்னா, அடுத்த செட்டையும் 23-21 என தன்வசப்படுத்தினார். 

மற்றொரு போட்டியில் இந்தியாவின் சிந்து 21-18, 21-10 என்ற நேர் செட் கணக்கில் ஹாங்காங்கின் லியாங்யை தோற்கடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

, ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் காஷ்யாப் 21-15, 9-21, 20-22 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் லீ டாங்கிடம் வீழ்ந்தார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் சவுரப் வர்மா 15-21, 8-21 என்ற கணக்கில் இந்தோனேசியாவின் டாமி சுகார்டோவிடம் தோல்வியடைந்தார். 

Newsletter