சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி - பெண்கள் பிரிவில் சிந்துவும் வெளியேற்றம் , இந்தியாவின் பதக்க வாய்ப்பு முடிவு

நவம்பர் - 17

சீன ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின்  சிந்து தோல்வியடைந்தார்.

சீனாவின் புகுசு நகரில் சீன ஓபன் பேட்மிண்டன்  தொடர் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் சிந்து, சீனாவின் பங்ஜியேவை எதிர்கொண்டார். இதன் முதல் செட்டை 11-21 என மோசமாக பறிகொடுத்தார் சிந்து. சொந்த மண்ணில் எழுச்சியுடன் ஆடிய பங்ஜியே ஆக்ரோஷத்துடன் விளையாடினார். இதனால், இரண்டாவது செட்டையும் சிந்து 10-21 என கோட்டை விட்டார். 37 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் சிந்து 11-21, 10-21 என்ற நேர் செட்கணக்கில் தோல்வியடைந்தார்.

முன்னதாக, பெண்கள் பிரிவில் சாய்னா நேவாலும், ஆண்கள் பிரிவில் பிரணாயும் ஏற்கனவே இத்தொடரில் இருந்து வெளியேறினர். இந்த நிலையில், தற்போது, சிந்துவும் தோல்வியடைந்ததால், சீன ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு முடிவுக்கு வந்தது. 

Newsletter