சீனா ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் வெற்றி பெற்றார்

நவம்பர் 15: சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரின் பிரதான சுற்று போட்டிகள் புஸ்கோவ் நகரில் இன்று தொடங்கின . இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், அமெரிக்காவின் பெய்வென் ஸாங்கை எதிர்கொண்டார். இப்போட்டியின் முதல் செட்டை சாய்னா 21-12 என கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் அதிரடியாக விளையாடிய சாய்னா அந்த செட்டையும் 21-13 என கைப்பற்றினார். இதன்மூலம் 21-12, 21-13 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற சாய்னா இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். 

ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் லியூ - ஸாங் ஜோடியுடன் மோதியது. இப்போட்டியில் சீனா ஜோடி 21-13, 21-13 என்ற செட்களில் இந்திய ஜோடியை வீழ்த்தியது. இன்று நடைபெற உள்ள ஒற்றையர் பிரிவு போட்டிகளில் இந்தியாவின் பி.வி.சிந்து, எச்.எஸ்.பிரனோய், சமீர் வெர்மா ஆகியோர் விளையாட உள்ளனர்.

Newsletter