எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

கோவை, அக்டோபர் 30: முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கோவை மாவட்டம், இக்கரை பேளுவாம்பட்டி ஊராட்சியில் மகளிர்கள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டுப்போட்டிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். 



எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா 03.12.2017  அன்று நடைபெறுவதையொட்டி, கோவை மாவட்டம், இக்கரை பேளுவாம்பட்டி ஊராட்சியில் நேற்று ஊரக பகுதிகளிலுள்ள மகளிர்கள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டுப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் திரு. டி.என்.ஹரிஹரன் தலைமையில், திரு..வேலுமணி தொடங்கி வைத்தார். 

பின்னர், அவர் பேசியதாவது, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சரித்திர சாதனைகளை போற்றும் வகையிலும், அவரது மக்கள் சேவைகளை நினைவு கூறும் வகையிலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்டங்களிலும் வெகு சிறப்பாக கொண்டாட உத்தரவிட்டிருந்தார்.  

அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் வருகின்ற  03.12.2017 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பள்ளி மற்றும் கல்லூரி அளவில் நடத்தப்பட்ட விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாரட்டுச்சான்றிதழ் வழங்குதல்,  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவைப் போற்றும் வகையிலான அரிய புகைப்படக்கண்காட்சி மற்றும் கழைநிகழ்ச்சிகளை நடத்துதல், மேலும், ஊரக மகளிர்கள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டுப்போட்டிகளை மாவட்ட அளவில் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் பாரட்டுச்சான்றிதழ்களும் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திட தீர்மானிக்கப்பட்டது. 



அதன், தொடக்கமாகவே, பெண்களுக்கான துரோபால், கயிறு இழுத்தல் போட்டிகளும், ஆண்களுக்கான வாலிபால், கபாடி உள்ளிட்ட விளையாட்டுப்போட்டிகளும் துவங்கப்பட்டுள்ளன.  இவ்வாறு ஊரக பகுதிகளில் நடத்தப்படும் விளையாட்டுப்போட்டிகளால் மகளிர்கள் மற்றும் இளைஞர்கள் புத்துணர்ச்சி பெறுவதோடு மட்டுமல்லாமல் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் களமாகவும் இவை அமையும். 

இப்போட்டிகள் அனைத்து ஊராட்சிகளிலும் நடத்தப்படவுள்ளதால் அனைத்து பகுதியைச் சேர்ந்த மகளிர்கள், விளையாட்டு வீரர் வீரங்கனைகள், இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்று விழாவினை சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.துரை.ரவிசந்திரன், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திரு.ரூபன்சங்கர்ராஜ், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திரு.செல்வராஜ், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திரு.சந்திரசேகர், வட்டாட்சியர் திரு.முரளி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter