பெண்கள் ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்தியா சீனாவை வீழ்த்தியது

அக்டோபர் 30:  ஜப்பானில் நடைபெற்று வரும் பெண்கள் ஆசியக் கோப்பைப் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியா,  சீனாவை வீழ்த்தியது.

ஜப்பானில் பெண்களுக்கான 9-வது ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி நடைபெற்று வருகிறது. இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டு, நடைபெற்று வரும் இத்தொடரில் இந்தியா ”ஏ” பிரிவில் இடம்பிடித்துள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி, சிங்கப்பூரை (10-0) என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து, இரண்டாவது போட்டியில் இன்று (அக்.,30) சீனாவுடன் மோதியது. 

இதில், ஆக்ரோஷமாக ஆடிய இந்திய அணியை, சீனாவால் தாக்குபிடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதியின் 19-வது நிமிடத்தில் குர்ஜித் முதல் கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து கோல்கள் அடித்து இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில், 4-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

இந்தியாவின் நவ்நீத் கவுர், நேகா கோயல், குர்ஜித் கவுர் மற்றும் ராணி தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டினர். இந்த வெற்றியின் மூலம், 2 வெற்றிகளை பெற்ற இந்திய அணி, 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. நாளை நடக்கும் லீக் ஆட்டத்தில் இந்தியா, மலேசியாவை எதிர்கொள்கிறது. 

Newsletter