200-வது போட்டியில் சதம் அடித்து இந்திய அணியின் கேப்டன் கோலி சாதனை

நியூசிலாந்துக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற  தனது 200-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இதில், டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. ஒரு பக்கம் விக்கெட்டுக்கள் மளமளவென வீழ்ந்தாலும் மறுமுனையில் கேப்டன் விராட் கோலி நிலைத்து நின்று விளையாடினார்.

இந்த போட்டி விராட் கோலிக்கு 200-வது போட்டியாகும். 

200-வது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 62 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து, விராட் கோலி, 111 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் அடித்தார்.

தனது 200-வது போட்டியில் விராட் கோலி சதம் அடித்து அசத்தியுள்ளார். இது அவரின் 31-வது ஒருநாள் சதமாகும். அதிக சதங்கள் (49) அடித்தவர்கள் வரிசையில் முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter