டி.ஆர்.சுகுராமன் நினைவு கூடைப்பந்து போட்டியில் சபர்பன், அல்வேனியா பள்ளி அணிகள் வெற்றி

கோயம்புத்தூர் ரவுன்ட் டேபில் எண் 9 மற்றும் டெக்ஸ்சிட்டி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் மகளிருக்கான கூடைப்பந்துப் போட்டி கோவை வஉசி மைதானத்தில் நடைபெற்றது.

டி.ஆர்.சுகுராமன் நினைவாக நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் பிரிவில் சபர்பன் ஆண்கள் பள்ளி, பிஎஸ்ஜி சர்வஜனா பள்ளி, மல்லையன் பள்ளி மற்றும் ஜெய்சி பள்ளி ஆகியவை பங்கேற்றன. இதில், சபர்பன் ஆண்கள் பள்ளி கோப்பையை வென்றது. பிஎஸ்ஜி சர்வஜனா பள்ளி மற்றும் மல்லையன் பள்ளி அடுத்தடுத்த இடங்களை பிடித்தன. 

பெண்கள் பிரிவில் அல்வேனியா பள்ளிக்கும் சுகுனா பிஐபி பள்ளி அணிக்கும் இடையிலான போட்டியில் அல்வேனியா பள்ளி வெற்றிபெற்று கோப்பையை வென்றது.



வெற்றி பெற்ற ஆண்கள் அணிக்கு ரவுன்ட் டேபில் 9 தலைவர் சி.ஆர்.ஆனந்தகிருஷ்ணன், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஏரியா 7 ரவுன்ட் டேபில் துணைத் தலைவர் எம்எல்எஃப் டி.எஸ்.அஸ்வின் குமார் மற்றும் கவுரவ விருந்தினர் 41 இ.ஆர்.ரவுன்ட் டேபில் இந்தியா ஜி.ஆர்.கோவிந்தராஜன் ஆகியோர் பரிசுக் கோப்பைகளை வழங்கினர். 

வெற்றி பெற்ற பெண்கள் அணிக்கு ரவுன்ட் டேபில் லேடிஸ் சர்க்கில் எண் 1 தலைவர் காயத்ரி ஆனந்த கிருஷ்ணன் பரிசுக் கோப்பையை வழங்கினார்.

Newsletter