53-வது பி.எஸ்.ஜி கோப்பைகான அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் இறுதிப் போட்டிக்கு இந்திய ராணுவ அணி தேர்வு

53-வது பி.எஸ்.ஜி கோப்பைகான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் அமைந்துள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.



இப்போட்டியின் அரை இறுதியில் பஞ்சாப் போலீஸ் அணியை எதிர்த்து இந்திய ராணுவ அணி விளையாடியது. இதில் இந்திய ராணுவ அணி பஞ்சாப் போலீஸ் அணியை 73- 65 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது.



இன்று நடைபெறும் இறுதி போட்டியில் இந்திய ராணுவ அணி ஐ.ஓ.பி அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும். இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 50 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பை வழங்கப்படவுள்ளது.

Newsletter