பி.எஸ்.ஜி கோப்பைக்கான ஆண்கள் அகில இந்தியக் கூடைபந்துப் போட்டியின் அரையிறுதிப் போட்டி இன்று துவக்கம்



கோவையில் நடைபெற்று வரும் 53வது பி.எஸ்.ஜி. கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் இன்று முதல் அரை இறுதி போட்டியில் இந்தியன் ஓவர்ஸீஸ் அணியை எதிர்த்து விஜயா வங்கி அணியும், 2வது அரை இறுதியில் பஞ்சாப் போலீஸ் அணி இந்திய ராணுவ அணியுடன் மோதுகிறது.

மூன்றாம் நாள் போட்டி முடிவுகள்:

முதல் போட்டியில் விஜயா வங்கி அணியை எதிர்த்து அரைஸ் அணி விளையாடியது. இதில் விஜயா வங்கி அணி 75 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் வீரர்கள் அனில் குமார் 23, கார்த்திகேயன் 21, நவீன் குமார் 18 புள்ளிகள் எடுத்தனர். எதிர்த்து, விளையாடிய அரைஸ் அணி 74 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது. இதன் வீரர்கள் விஜய பாஸ்கர் 24, சசங்க் ராய் 19, அருன் பிரசாந்த் 14 புள்ளிகள் எடுத்தனர்.



இரண்டாவது போட்டியில் கஸ்டம்ஸ் அணியை எதிர்த்து கேரளா மாநில மின்சார வாரிய அணி விளையாடியது. இதில் கஸ்டம்ஸ் அணி 79 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் வீரர்கள் மயில் ராஜ் 21, தினேஷ் 16, ஜஸ்டின் ஞானராஜ் 11 புள்ளிகள் எடுத்தனர். எதிர்த்து விளையாடிய கேரளா மாநில மின்சார வாரிய அணி 70 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது. இதன் வீரர்கள் கோகுல் 19, ஆல்பின் பாபி 18, அகில் 9 புள்ளிகள் எடுத்தனர்.

மூன்றாவது போட்டியில் பஞ்சாப் போலீஸ் அணியை எதிர்த்து ஆர்.சி.எஃப் அணி விளையாடியது. இதில் பஞ்சாப் போலீஸ் அணி 113 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. இத்தொடரில் முதன் முறையாக பஞ்சாப் போலீஸ் அணி 100 புள்ளிகளுக்கு மேல் எடுத்தது குறிப்பிடத்தக்கது. இதன் வீரர்கள் அம்ஜியத் சிங் 18, குர்ஜிந்தர் சிங் 17, ரன்பீர் சிங் 15 புள்ளிகள் எடுத்தனர். எதிர்த்து விளையாடிய ஆர்.சி.எப். அணி 71 புள்ளிகள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் வீரர்கள் பிரகாஷ் மிஷ்ரா 32, ராஜன் சர்மா 10, ஹர்மந்தீப் சிங் 10 புள்ளிகள் எடுத்தனர்.

நான்காவது போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை எதிர்த்து இந்திய ராணுவ அணி விளையாடியது. இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 75 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் வீரர்கள் அரவிந்த் 20, ஜீவானந்தம் 18, பிரசன்ன வெங்கடேஷ் 15 புள்ளிகள் எடுத்தனர். எதிர்த்து விளையாடிய இந்திய ராணுவ அணி 71 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது. இதன் வீரர்கள் கோபால் ராம் 24, ஐசாக் டி தாமஸ் 18, விக்கி 23 புள்ளிகள் எடுத்தனர்.

இன்று மாலை 5.00 மணி அளவில் நடைபெறும் அரையிறுதி முதல் போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை எதிர்த்து விஜயா வங்கி அணி விளையாடுகின்றது. மாலை 6.30 மணி அளவில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் போலீஸ் அணியை எதிர்த்து இந்திய ராணுவ அணி விளையாடுகின்றது. இதில் வெற்றி பெறும் இரு அணிகள் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் விளையாடும்.

Newsletter